Home » கட்டுரைகள் » கிருஷ்ணா

இக்கட்டுரையை படிப்பதற்கு முன்….!

 

கிருஷ்ணா

கிருஷ்ணா   

மதத்தின்பால் தீவரவேட்கை கொண்டவர்களும், ஆன்மீகத்தில் அதீதநாட்டமுள்ளவர்களும், உங்களுக்கான  பார்வையில் படித்தல் வேண்டாம்.

                   உங்களுக்குள், ஒரு வட்டம் போட்டு இருப்பீர்கள். ஆதலால் இந்தக் கட்டுரை இடையூறாக இருக்கலாம்.

                             அவனை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது.. எல்லோரும் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

                             இளம்பெண்கள் ஏன் அவன்மீது தீராக்காதல் கொண்டதாக வரலாறு சொல்கிறது.

                             பெரியவர்களோ, அவனை விளையாட்டுப் பிள்ளையாகவும், விவரமறிந்தவர்கள் ;அவனை கபடதாரியாகக்கூட பார்த்தார்கள். மகாபாரதத்து போரின் முழுமுதல்  சூத்ரதாரி யார் ?

                             எல்லோரும் சகுனியை பகடைக்காயாய் உருட்டுவார்கள். அவன்தான் பகடை உருட்டி போருக்கு வித்திட்டவன் என்று. ஆனால், சூத்ரதாரி கிருஷ்ணன்”அல்லவா?

                             பாரதி  அவனை சேவகன் என்று பாடுகிறான். அவரவர் ; தேவைக்கு என்ன உறவோ  அதுவாகவே அவனைக் கொண்டாடுகின்றனர்;.

                             வானத்தின் வண்ணம்தான் கிருஷ்ணா என்பார் கள். வானம், ஒரு மாயத்தோற்றம்,  வானத்தை வசப்படுத்துவோம் என்று கவிஞர் கள் அழகுக்காக சொல்வார் கள். முடியுமா? முடியாது அல்லவா. அதுபோலத்தான் கிருஷ்ணா.

                             கிருஷ்ணா.  இந்த வார்த்தைக்குள்  ஒரு வசிகரத்தன்மை இருக்கும். அவனை உளவியல்ரீதியாக ஆராய்ந்தால் “ ஆதியோடு அந்த பிரம்மாண்டமான பரி மாணம்” பரியும். ;. அவனே எல்லையற்ற விரிந்துக்கொண்டே இருக்கின்ற பிரபஞ்ச மனம் ஆகும்.

                             மனித மனம், லௌகீக வாழ்க்கைக்கு ஏற்ப சுருங்கி இருக்கும்.

                             கிருஷ்ணன், என்ன செய்தான்?

                             மண்ணைத் தின்றான் என்கிறது ஆன்மீகம். குழந்தை மண்தானே தின்னும் என்பார்கள்.

                             மனித மனம் என்ன செய்கிறது. மண்ணீன்மீது ஆசைக் கொள்கிறது. மகாபாரத்து போரே மண்ணுக்கானதுதானே!

                             அவன் வெண்ணையை திருடித் தின்றான் என்றார்கள்.

                              மனித மனமோ, சந்தர்ப்பம் கிடைத்தால், அடுத்தவர்; பொருளை அபகரிக்க திட்டம் போடுகிறது அல்லவா? கடிவாளம் போட்டால் தப்பிக்கலாம். இல்லாவிட்டால், என்னவாகும்.?

                   பருவ வயதில் பெண்களின் ஆடையை திருடி ஒளித்து வைத்தானாம்!

                   மனித மனமோ, “பெண்களின் ஆடைகளைக் களையாமலேயே அணுஅணுவாக ரசிக்கத் துடிக்கிறதே?

                   அவன் நரகாசூரனை வதைத்தான் என்கிறது புராணம்.

                   நரகாசூரன்  யார்  கூர்மையாக ஆராய்ந்தால், நரகத்தை உருவாக்கக்கூடிய குணநலன்களான, பொறாமை, ஆசை, கடுசொற்கள், சினம் இவைகள்தானே, இவைகளின் மொத்தக் கலவை நரகனின் அரசன். அவனை அழித்தது யார் ? மனம் என்னும் அங்குசமாக கிருஷ்;ணன் வதைத்து விட்டான்.

                   வதைத்த நாளைத்தான் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். நரகசூரன் மறைவைக் கொண்டாடுவது மட்டும் அன்றைய கடனாக நினைக்கிறோம்.  மறுநாளில் இருந்து மனித மனம் என்ன செய்கிறது?

                   நான் நிரந்தரமானவன் என்கிறான் கிருஷ்ணன். ஆம் நிரந்தரமானவன்தான். ஆனால் ஓர்  இடத்திலும் நிரந்தரமாக தங்கமாட்டான். ஒரு நாள் பாண்டவர் களின் குடிலில், மற்றொரு நாள் கௌரவர் களின் செல்வாக்கான மாளிகையில் வாசம்.

                   மனித மனம் என்ன செய்கிறது. எங்கெங்கோ அலைபாய்கிறது அல்லவா? இந்த நிமிடம் இந்தியாவில் இருக்கும். அடுத்த நிமிடம் அமெரிக்காவின் எல்லைக்கே, காசே இல்லாமல் போய்விடும்.

                   எல்லாவற்றிலும், நானே என்கிறான். ஆம். அசையும், அசையாப் பொருள்களில்கூட இருக்கிறான் என்பார்கள்.

                   பிரபஞ்சத்தின் ஒவ்வொரு உயிருக்குள்ளும், மனதாகவே மறைந்திருக்கிறது அல்லவா?

                   மனதை இதுவரை யாரும் கண்களால் கண்டதுண்டா?

                   கிருஷ்ணணை யாரும் பார்த்தது உண்டா?

                    கிருஷ்ணணை உணர்ந்தவன் மகானாகிறான். மனதை உணர்ந்தவனும் மகானாகிறான்.

                   இப்படி பரந்து விhpந்த எல்லையற்ற மனமே,, ஏன் அவனாக இருக்கக்கூடாது.? அவனை ஒரு சிறுவட்டத்திற்குள் புகுத்துதல் நலமோ?

                   கிருஷ்ணனையும் , மனதையும் ஒன்றாக்கி., பாருங்கள். இக்கட்டுரைப் பொருந்துகிறதா?   நம்புவோம், நமது நம்பிக்கையாகட்டுமே!

                                                               \

— கே. அசோகன்,

                                                                    

 

                           

 

2 Replies to “கிருஷ்ணா”

  1. சொன்னவிதம் வித்தியாசம்…

    அருமை ஐயா…

    1. asokan says:

      தங்களின் வருகையும் கருத்தும் ஊக்கப்படுத்துகிறது. மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*